Saturday, July 22, 2006

ஒரு சனிக்கிழமை

இன்றைய நாள் மிக வேகமாக ஓடி மறைந்து விட்டது.காலையில் புகிஷ்(BUGIS) சென்று எங்களின் தள்ளுவண்டியைச் சிறிது நேரம் பார்த்துக்கொண்டேன். ஆனால் நேரம் ஆக ஆக சலிப்பு அடைந்தேன்.சரி கொஞ்சம் நேரம் லிட்டல் இந்தியா(little India) போய் வரலாம் என்று கிளம்பினேன்.ஆனால் மறுபடியும் திரும்பிச் செல்ல மனம் இல்லாமல் வீட்டிற்கு வந்து விட்டேன்.அப்படி செய்தது தவறுதான் என்னென்றால் எனக்கும் தள்ளுவண்டியைப் பார்த்துக்கொள்ளும் கடமை உள்ளது.பாதியில் மற்றவர்களின் தலையில் வேலையைக் கட்டி விட்டு வந்தது தவறுதான்.அப்புறம் அப்பாவோடு பெரியம்மா வீட்டிற்குச் சென்றேன்.வீடு வந்து சேர்வதற்கே 10 மணி மேல் ஆகிவிட்டது.நல்ல வேளை அண்ணன் சத்தம் போடவில்லை.என்னென்றால் அப்பாவோடுதான் வெளியே போனேன்.இதே நண்பர்களுடன் வெளியே போய் இவ்வளவு நேரம் கழித்து வந்தால் அண்ணன் என் தோலை உரித்து இருப்பார்.

3 Comments:

Blogger மா சிவகுமார் said...

துர்கா,

உங்கள் தினசரி நடைமுறைகளை சிங்கப்பூர் பற்றி தெரியாதவர்களுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும் என்று நினைக்கிறேன். தவறாமல் தொடர்ந்து எழுதுங்கள். புகிஷ் பற்றி லிட்டில் இந்தியா பற்றி நிறைய எழுதலாம் நீங்கள். ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு அனுபவங்கள், அறிவு. அதைப் பகிர்ந்து கொண்டால் அடுத்தவர்கள் கண்டிப்பாக பலன் பெறுவார்கள்.

அன்புடன்,

மா சிவகுமார்

5:30 PM  
Blogger t.h.u.r.g.a.h said...

வணக்கம்.அதைப் பற்றி எழுத நினைத்துக் கொண்டிருக்கின்றேன்.படங்களோடு இருந்தால் நல்லது என்று நினைத்தேன்.படங்கள் வரட்டும் அதைப் பற்றி பதிவை வெளியிடுகின்றேன்.

11:23 PM  
Anonymous Anonymous said...

நல்ல அண்ணா!!

9:57 PM  

Post a Comment

<< Home