Saturday, August 19, 2006

§¿üÚ நேரமே சரியில்லை.காலையில் என் மூக்குக்கண்ணாடி உடைந்து விட்டது.எனக்குதான் அது இல்லமால் கண் தெரியதே.ஆகவே §¿üÚ கல்லூரிக்குச் செல்லவில்லை.

§¿üÚ «ôÀ¡×õ «Åâý ¿ñÀÕõ Å£ðÊüÌ Åó¾¢Õó¾É÷.«Å÷ ¿ñÀÕìÌ ±ý¨É ¦ÅÌ ¿¡Ç¡¸ ¦¾Ã¢Ôõ.²ý¦ÉýÈ¡ø ¿¡í¸û «¨ÉÅÕõ ´§Ã °÷.±ý¨Éô À¡÷ò¾×¼§É ±ýÉ ²§¾¡ Á¡üÈõ ¯ýÉ¢¼õ ¦¾Ã¢Ô§¾ ±ýÚ ¦º¡øĢŢð¼¡÷."±ýÉ Á¡üÈõ «ñ½¡",±ýÚ ¿¡Ûõ §¸ðÎ ¨Åò§¾ý.
±ÉìÌò ¾¡ý §¸ûÅ¢¸û §¸ð¸Å¢ø¨Ä ²ýÈ¡ø ¾¨Ä ¦ÅÊòÐŢΧÁ!À¡Åõ «ÅÕìÌ ±ôÀÊ ¦º¡øÅÐ ±ýÚ ¦¾Ã¢ÂÅ¢ø¨Ä.

"Ó¸ò¾¢ø ²§¾¡ Á¡üÈõ ¦¾Ã¢ÔÐ.þô¦À¡ØÐ ¦¸¡ïºõ ¦ÅÙò¾ Á¡¾¢Ã¢ þÕ츢ýÈ¡ö".(no fair&lovely ok)
“ºÃ¢ «ôÒÈõ §ÅÚ ±ýÉ Á¡üÈõ «ñ½¡?”.
“þô¦À¡ØÐ Ó¸õ ¦¾Ç¢Å¡¸ þÕ츢ýÈД.
¿ÎÅ¢ø þó¾ ´ð¨¼ Å¡ö 'maid' ,”«Åí¸ÙìÌ þô§À¡ ãÊ ¿¢ÇÁ¡¸ þÕ츢ýÈÐ «¾¡ý ¦¸¡ïºõ
Á¡üÈõ ¦¾Ã¢ì¸¢ýÈÐ.«ôÒÈõ ¦¸¡ïºõ þ¨ÇòÐ §ÅÚ
§À¡Â¢ð¼í¸”.
.±ÉìÌ ¦¾Ã¢óРŢð¼Ð.±ÉìÌ þó¾ ¸¢ÆÅ¢ ¬ôÒ ¨Åì¸ô §À¡¸¢ýÈÐ.
“²ý ÍüÈ¢ ŨÄòÐ §ÀÍ츢ýÈ£÷¸û.Ò¸¡÷¸¨Ç ±ÎòРŢÎí¸û”, ±ýÚ ¿¡Ûõ ¦º¡øĢŢð§¼ý.
þо¡ý º¡ìÌ ±ýÚ ¸¢ÆÅ¢Ôõ ¨ÅòÐ ¾¡ì¸¢Å¢ð¼Ð.
"º¡ôÀ¢¼§Å Á¡ð§¼í¸¢ýÈ¡í¸.º¡ôÀ¢¼ ¿¡ý ¦¸ïº §ÅñÎõ".
¬Á¡ «ýÈ¡¼õ ¦À¡Ã¢ò¾ Á£¨Éî º¨ÁòÐ ¯Â¢¨Ã Å¡í¸¢É¡ø ±ôÀÊ º¡ôÀ¢ÎÅÐ?±ýÚ ÁÉÐìÌû ¾¢ðʧÉý.
“«ôÒÈõ ¿£í¸û Å¡í¸¢ì ¦¸¡Îò¾ À¡Éò¨¾ì ÌÊì¸ Á¡ð¼¡í¸.'milo'§¸ð¼¡ø þø¨Ä ±ýÚ ¦º¡øĢŢð§¼ý.«ÐìÌ À¢È̾¡ý
«ó¾ À¡Éò¨¾ì ÌÊ츢ýÈ¡í¸”.
«ôÀ¡ ±ý ÍÚÍÚô¨Àô À¡÷òÐ ²§¾¡ 'energy drink' Å¡í¸¢ì ¦¸¡Îò¾¡÷.«¨¾ì ÌÊìÌõ ¦À¡ØÐ ÌÁðÊ즸¡ñÎ ÅÕõ.þÕó¾¡Öõ 3 Êý¨É ÓÊòÐÅ¢ð§¼ý.
"«¾ý «ýÈ¡¼õ ÌÊ츢ý§Èý§É"±ýÚ ¿¡ý ¦º¡øÄ
"¿¡ý ¸Äì¸¢ì ¦¸¡Îì¸Å¢ð¼¡ø þÅí¸ ÌÊì¸ Á¡ð¼í¸"±ýÚ ¸¢ÆÅ¢ ¦º¡ýÉÐ.
"¬Á¡ «Åí¸ ¦º¡øÖÅÐõ ºÃ¢¾¡ý", ±ýÚ «ôÀ¡×õ ´òÐ °¾¢É¡÷.
±øÄ¡õ ±ý ¿¢Ä¨Á ±ýÚ ÁÉò¾¢üÌû ¾¢ðÊ즸¡ñ§¼ý.
þýÚ Á§Äº¢Â¡Å¢üÌî §À¡¸¢ý§Èý.ÁÚÀÊÔõ ¿¡¨Ç ÅóÐŢΧÅý.¸øæâ þýÛõ ÓÊÂÅ¢ø¨Ä.´Õ Å¡Ãõ þýÛõ ¸øæâìÌî ¦ºøħÅñÎõ.

Thursday, August 17, 2006

16?

தேர்வுகள் எல்லாம் முடிந்து விட்டது.ஒரே மகிழ்ச்சிதான் எனக்கு.அடுத்த தவணை வரை சற்று நிம்மதியாக இருக்கலாம்.இருந்தாலும் விடுமுறையிலும் படிக்க வேண்டும்.முக்கியமாக இந்த பௌதிகத்தைக் கரைத்துக் குடிக்க வேண்டும்.இந்த மண்டையில் பௌதிகம் ஏறுவது சற்று கடினம்தான்.இருந்தாலும் முயற்சியை விடக்கூடாது.

இன்று வகுப்பில் மொத்தம் 8 பேர்கள் இருந்தோம்.பாவம் எங்கள் புது பேராசிரியர்.இன்றுதான் முதல் முறையாக எங்களுக்கு பாடம் கற்பிக்க வந்தார்.அவர் பெயரைக் கூட முதலில் சொல்லவில்லை.நான் கேட்ட பொழுது தான் பெயரைச் சொன்னார்.அவர் எங்கள் எண்ணிக்கையைப் பார்த்த அதிர்ச்சியில் பெயரைச் சொல்ல மறந்துவிட்டார் என்று சொன்னார்.அவர் இந்த அளவிற்குக் குறைவான மாணவர்களைப் பார்க்கவில்லை என்றார்.அவர் கெட்ட நேரம் என் நண்பர்கள் அனைவரும் இன்று கல்லூரிக்கு மட்டம் போட்டு விட்டு மிருகக்காட்சி சாலைக்குச் சென்றுவிட்டார்கள்.

அதன் பிறகு சில கேள்விகளுக்குப் பதிலளிக்கச் சொன்னார்.முதல் கேள்வியே சற்று கடினமாக இருந்தது.'How do you feel about this module – in general? Or when you talk to your friends in other polys or JCs about their learning experiences? '

எனக்கு என் தொழில்நுட்ப கல்லூரியில் உள் நண்பர்களைத் தவிர வேறு யாரையும் தெரியாது.”மார்க் எனக்கு சீங்கப்பூரில் வேறு கல்லூரியில் தோழர்கள் யாரும் இல்லை” என்று சொன்னேன்.மார்க் எனது பேராசிரியர் பெயர்.அவர்தான் அவரை அப்படி கூப்பிட சொன்னார்.
“ஏன் இல்லை”
“நான் மலேசியாவில் இருந்து வந்துள்ளேன் எனக்கு இங்கு நண்பர்கள் மிகவும் குறைவு”.
“சரி மலேசியாவில் உள்ள உன் நண்பர்களைப் பற்றி எழுது”.
“மலேசியாவில் என் வயது நண்பர்கள் யாரும் தொழில்நுட்ப கல்லூரியில் படிக்கவில்லை”.
“உனக்கு வயது என்ன?”
“நீங்களே யுகித்துக்கொள்ளுங்கள்”
“16?18?”
“இல்லை மார்க் எனக்கு வயது 2_” (age is secret)
“சரி அப்படியென்றால் உனது பல்கலைகழக நண்பர்களைப் பற்றி எழுது” என்று சொல்லிவிட்டார்.

இது வரையிலும் அனைவரும் என் வயது 18 இல்லை 19 என்றுதான் சொல்வார்கள்.இவர் மட்டும்தான் 16 என்று ஏமாந்துப்போன முதல் ஆள்.இன்று வகுப்பும் 12 மணிக்குள் முடிவடைந்துவிட்டது.என் வேலைகளைச் சீக்கரம் முடித்துவிட்டு செல்லா அண்ணாவுடன் சற்று நேரம் ‘சாட்’ செய்துக்கொண்டிருந்தேன்.அவர் என்னவென்றால் நான் சன் டிவி தமிழில் பேசுகின்றேன் என்று சொல்லிவிட்டார்.ஐயகோ நான் என்ன செய்வேன்?அதிகம் ஆங்கிலம் பேசுவதால் தமிழ் மட்டமாக பேசுகின்றேனோ?

அப்புறம் இன்று காலையிருந்து ஒரு ரொட்டித்துண்டைத் தவிர வேறு ஒன்றும் சாப்பிடவில்லை.பசி உயிரை எடுக்கின்றது.இப்பொழுதுதான் அண்ணி இட்டலி சுட்டுக்கொண்டு இருக்கின்றார்.சரி நான் போய் இட்டலியை ஒரு புடி புடிக்க வேண்டும்.

தமிழீழத்தின் சோகங்கள்

கேட்டுப் பாருங்கள்
http://ennz.springdoo.com/public/play/default.aspx?id=r1ff4c866efbd693d6

Tuesday, August 15, 2006

ribena vs maya

இன்றும் எனக்கும் என் மருமகனுக்கும் சண்டை.என்ன சண்டை என்று நீங்களே கேட்டுப்பாருங்கள்.


ribena vs maya

இதுதான் ரெபீனா மாயா ஆன கதை.யாருக்கவது ரெபீனா என்னவென்று தெரியவிட்டால் கிழே உள்ள படத்தைப் பார்கவும்

கிளிப் பேச்சைக் கேட்கவா?

சில தினங்களுக்கு முன்பு வேலை வெட்டி இல்லாமல் பிராணவ்வோடு கணினியில் விளையாடிக்கொண்டிருந்தேன்.அப்பொழுது நான் பதிவு செய்த ஒலிநாடா இது.

கிளிப் பேச்சைக் கேட்கவா?

நன்றி செல்லா.உங்கள் உதவியால்தான் என்னால் இந்த ஒலிப்பதிவை வெளியிட முடிந்தது.சிவக்குமார் அண்ணாவிற்கும் நன்றி.அவர்தானே உங்களை அறிமுகப்படுத்தினார்.அப்புறம் இந்த தலைப்பும் செல்லாவுடையதுதான்.அவர்தான் வற்புறுத்தி இந்த தலைப்பை வைக்க சொன்னார்.
இன்று எனது கடைசி தேர்வு முடிவடைந்தது.சற்று கடினம் தான்.ஆனால் அனைத்து கேள்விகளுக்கும் விடை அளித்துவிட்டேன்.அடுத்த வாரத்தோடு கல்லூரியின் முதல் தவணை முடியப்போகின்றது.ஒரு மாதத்திற்கு நல்ல ஊர் சுற்றப்போகின்றேன்.கணினி முன் நேரத்தைச் செலவழித்து சலித்துப்போய் விட்டது.தனியாக ஊர் சுற்றதான் சற்று கஷ்டமாக இருக்கின்றது.என்ன பண்ணுவது?அடுத்த தவணை புதிய வகுப்பிற்கு மாறி செல்ல வேண்டும்.மறுபடியும் புதிய நண்பர்கள், புதிய சூழ்நிலை.என்னால் சமாளிக்க முடியும் என்று நம்பிக்கை உள்ளது.ஆனால் இந்த தேர்வுகள்தான் சற்று பயமுறுத்துகின்றது.இன்று அறிவியல் பாடம் அதுவும் பெளதிகம்.எனக்கும் அந்த பாடத்திற்கும் ஒத்துப் போகாது.இதில் இதை சார்ந்த கேள்விகள் மட்டும் தான் அதிகம் தேர்வில் வருகின்றது.இதற்கு பெயர்தான் தலையெழுத்து என்று சொல்வார்கள்.

Friday, August 11, 2006

மறப்பேனா?

இன்று வீட்டிற்கு வெளியே 20 நிமிடம் நிற்க வேண்டிய சூழ்நிலை.ஏன்னென்றால் சாவியைக் கொண்டு போக மறந்து விட்டேன்.20 நிமிடம் என்ன செய்வது என்று தெரியவில்லை.கடைசியில் மடிப்பு கணினியுடன் சாட் பண்ண ஆரம்பித்துவிட்டேன்.வீட்டில் தான் 'wireless ' இருக்கின்றதே!என் தோழனுடன் நான் செய்த சாட் கீழே உள்ளது.
me says:
do you now i am locked outside my home
and chatting with u from outside now


何振杰 © onejeans says:
now?

me says:
yes

何振杰 © onejeans says:
yyyyyyy
no keys

me says:
i am at doorstep
yes i forgot the eys
funny right


何振杰 © onejeans says:
alamak~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~`
den how
what time ur family members come back?

me says:
all inside
sleeping
the maid is taking bath i think


何振杰 © onejeans says:
use handphone call them wake them up

me says:
my nephew is sleeping

何振杰 © onejeans says:
call your home number, should be loud enough to wake them

me says:
my brother will kill me if nephew wake up


何振杰 © onejeans says:
be crazy


me says:
seriously


何振杰 © onejeans says:
u outside
now sia
kind of brother u got????????????????????????????

me says:
the phone reciever is put down now,no matter how much I try it cannot go thru


何振杰 © onejeans says
hahaha


me says:
trying to knock the door now
still no answer

何振杰 © onejeans says:
call 999
maybe maid killed everyone and herself inside.
o_O


me says:
hehe
door opened
see ya


何振杰 © onejeans says:
okok


இன்று கற்றுக்கொண்ட பாடம்.....சாவியை மறந்துவிடக்கூடாது.பாவம் என்னால் என் ' மேட்' கொலைக்காரியாக ஆகிவிட்டார்கள்.பாவி ஒரு 20 நிமிடத்தில் என்னவெல்லாம் கற்பனைச் செய்து விட்டான்.

அப்பொழுது ரொம்ப கஷ்டமாக இருந்தது.இப்பொழுது சிரிப்பு தாங்க முடியவில்லை.நல்ல வேளை வீட்டில் அனைவரும் இருந்தார்கள்.இல்லையென்றால் இரவு 10 மணி வரைக்கும் வெளியே நிற்க வேண்டிய சூழ்நிலை.இன்று நேரமே சரியில்லை.கல்லூரியில் ஒரு பைத்தியத்துடன் சண்டை.கல்லூரியில் இந்த அளவுக்கு எனக்குக் கோபம் வந்தது இல்லை.என் பொறுமையை இன்று அந்த பைத்தியம் ரொம்ப சோதித்து விட்டாள்.வந்த கோபத்தை அடக்க முடிந்ததால் அவள் கன்னம் பழுக்கமால் தப்பித்தது.

நன்றி

சிவகுமார்தான் தமிழில் பதிவை எழுதச் சொல்லி மாட்டிவிட்டார்.இந்த பதிவை எழுத மூலக்காரணம் அவர்தான்.அவருக்கு மறுபடியும் நன்றி.முதலில் இந்த பதிவை ஆரம்பிக்கும் பொழுது கொஞ்சம் தயக்கமாக இருந்தது.தமிழைக் கொலை செய்மால் இருக்க வேண்டும் என்ற ஒரு நல்ல எண்ணம்தான் என் தயக்கத்திற்குக் காரணம்.ஆனால் என் பதிவைப் படித்தவர்கள் அனைவரும் இதுவரையில் என் பதிவைப் பற்றி நல்ல விதமாக தான் சென்னார்கள்.உங்கள் அனைவருக்கும் என் நன்றி.தயவு செய்து ஏதாவது பிழைகள் இருந்தால் சுட்டிக்காட்டவும்.

திரு பாலபாரதி சிங்கை மக்கள் அடிமைகளா இருந்தகாலம் குறித்தும் செய்தி சேகரித்து எழுத சொன்னார்.எனக்கு தெரிந்தைப் பற்றிதான் எழுத முடியும்.தெரியதைப் பற்றி எழுதி மாட்டிக்கொள்ள வேண்டாம் என்று நினைக்கின்றேன்.எனக்குத் தெரிந்தது எல்லாம் சீங்கப்பூர் மலேசியாவை விட்டு தனித்து வந்த நாளைதான் சுதந்திர தினமாக கொண்டாடுகின்றனர்.
இந்த பதிவைப் படிக்கும் பொழுது அதே சமயம் ஏதோ அடுத்தவரின் டைரியை திருட்டுத் தனமாக படிப்பது போன்ற உணர்வும் ஏற்படுகிறது என்று திரு பாலபாரதி பின்னூட்டம் இட்டு இருந்தார்.அய்யோ இது ஒன்றும் என் உண்மையான நாட்குறிப்பு இல்லை.அதைப் பத்திரமாக என் அலமாரியில் பூட்டு போட்டு வைத்துள்ளேன்.இந்த பதிவில் எந்த ரகசியமும் இல்லை.அனைவரும் தரளமாக படிக்கலாம்.ரொம்ப கஷ்டமாக இருந்தால் படிக்க வேண்டாம்.பாவம் நீங்கள்!இதுவரையில் படித்ததே பெரிய விஷயம்.

P.S:ஜொள்ளு சார் ,என் படத்தை மாற்றி விட்டேன்.இந்தப் படத்தைத் தேடிக்கொடுத்ததிற்கு நன்றி

Thursday, August 10, 2006

10/08

இன்று எனது பேராசிரியர் எங்கள் கல்லூரியில் கற்பிப்பது இதுவே கடைசி நாள்.ஆகவே எங்களுக்கு எல்லாம் மிட்டாய் எல்லாம் கொடுத்தார்.இந்த அறுந்த வாலுங்களை இதன் பிறகு பார்க்க வேண்டாம் என்ற சந்தோசம் போல் அவருக்கு.கடைசியாக அறிவுரை எல்லாம் சொன்னார்.எனக்கு ஞாபகம் இருப்பது எல்லாம் அவர் நேர்மை பற்றி சொன்னதுதான்.
"Integrity is very important to your future work life.If you have lost it once it is very difficult to gain it back.So always remember this."என்று சொன்னார்.கண்டிப்பாக இதை மறக்க மாட்டேன்.

அப்புறம் இன்று எல்லாரும் அடுத்த வாரம் வகுப்புக்கு மட்டம் போட்டு விட்டு விலங்குக் காட்சிச் சாலைக்குச் செல்வதைப் பற்றி திட்டம் திட்டிக்கொண்டிருந்தார்கள்.ஏற்கனவே இங்கு அப்படிதான் உள்ளது.இதில் விட்டு விலங்குக் காட்சிச் சாலைக்குச் செல்ல வேண்டுமா?வகுப்பில் நான் மட்டும் இருந்தாலும் பரவயில்லை, நான் கல்லூரிக்குச் செல்வதாக முடிவு எடுத்து உள்ளேன்.எற்கனவே எனது தேர்வு மதிப்பெண்கள் மிகவும் கேவலமா இருக்கின்றது.இதில் மட்டம் போட்டு விட்டு ஊர் சுற்ற இஷ்டமில்லை.

இன்று என்னுடன் படிக்கும் சக மாணவி ஒருத்திக்கும் அவளின் குழுவினர்க்கும் கருத்து வேறுப்பாடு.கோபத்தில் கதவைப் வேகமாக மூடிவிட்டு சென்றுவிட்டாள்.அதுவும் பேராசிரியர் முன்னிலையில்.அப்புறம் அவளின் காதலன் திறந்த வீட்டில் எதோ ஒன்று நுழைவது போல் சட்டென்று வகுப்பில் புகுந்து விட்டான்.கதவைத் தட்டிக்கொண்டு வர வேண்டும் என்ற ஒரு சாதாரண விஷயம் கூட அவனுக்குத் தெரியவில்லை.அப்புறம் அவன் பாட்டுக்கு அவளின் பொருட்களை எடுத்துக்கொண்டு என் வகுப்பு தோழர்களைக் நன்றாக ஏசிவிட்டு சென்றுவிட்டான்.இது அனைத்தும் எங்கள் பேராசிரியர் முன்னால் தான் நடந்தது.அவரும் கண்டும் காணாமலும் இருந்து விட்டார்,இதுங்களை எல்லாம் ஏசி/ அடித்து திருத்த முடியாது.17 வயது ஆகிவிட்டது.இன்னும் நாகரிகம் தெரியவில்லை.

Wednesday, August 09, 2006

விடுமுறை

இன்று சீங்கப்பூரின் பிறந்த நாள்.அதாவது சுதந்திர தினம்.எங்கு பார்த்தாலும் சீங்கப்பூருக்குப் பிறந்த நாள் வாழ்த்துக்கள் என்ற வாசகம் கண்ணில் பட்டது.நேற்று வரையிலும் சீங்கப்பூரின் சுந்திர தினத்தைப் பற்றி ஞாபகமே வரவில்லை.இன்று கல்லூரி விடுமுறை என்று கூட மறந்து விட்டேன்.நல்ல வேளை என் தோழி இன்று கல்லூரி இல்லை என்று சொன்னாள்.இல்லையென்றால் .......எல்லாம் ஒரு ஆர்வ கோளறுதான்.ரொம்ப படித்து விடுமுறைக்கூட மறந்துப்போயிற்று.

நேற்றுதான் சீங்கப்பூர் வந்த மாதிரி இருக்கின்றது.அதற்குள் 5 மாதங்கள் ஆகிவிட்டது.நாளை இன்னும் ஒரு பரீட்சை உள்ளது.அடுத்த வாரத்தோடு சோதனைகள் முடிந்துவிடும்.இன்னும் ஒரு வாரத்தில் அம்மாவைப் பார்க்க போகின்ற மகிழ்ச்சி எனக்கு.

சூரியாவிற்கும் ஜோதிகாவிற்கும் கல்யாணம் என்ற செய்தியை குறுஞ்செய்தி மூலம் என் தோழிக்குத் தெரிவித்தேன்.அவள் ஒரு சூரியா விசிறி....பைத்தியம் என்றே வைத்துக்கொள்லாம்.பாவம் ரொம்ப மனது உடைந்து போய்விட்டாள்.எனக்கு இனிமேல் நிம்மதி....சூரியா பற்றி அவளின் பினத்தல்களைக் கேட்க வேண்டாமே!

இன்று கல்லூரி இல்லமால் வீட்டில் இருக்க கஷ்டமாக இருந்தது.இதில் இந்த பிரணாவ்(அண்ணனின் மகன்)இன்று கார்டுன் என்று என் கணினியுடன் அமர்ந்து விட்டான்.எனக்கு எல்லாம் 17 வயதில் தான் கணினியை எப்படி பயன்படுத்துவது என்று தெரியும்.இந்த பொடுசு இப்பொழுதே கணினியில் தட்டச்சு செய்ய வேண்டும் என்று அடம் பிடிக்கின்றது.இந்த காலத்து பொடுசுகள் நம்மை விட ரொம்ப வேகம்தான்......

பிராணவ்க்கு கூடிய விரைவில் தம்பி/தங்கைப் பிறக்கலாம்.....எப்படி இருந்தாலும் எனக்கு வருங்காலத்தில் அடி நிச்சயம்.இப்பொழுதே இவனிடம் அடி வாங்குகின்றேன்.எற்கனவே 2 குட்டி பிசாசுகள் மலேசியாவில் என்னை அடிக்க காத்துக்கொண்டிருக்கின்றன....நான் ரொம்ப பாவம்.என்னதான் அடிவாங்கினாலும் இந்த குட்டிபிசாசுகள் மேல் எனக்கு ஒரு தனிபாசம் தான்.இன்னைக்கு இந்த புலம்பல்கள் போதும்.....

Sunday, August 06, 2006

நான் பேச நினைப்பது எல்லாம் ________

நானும் பார்த்துக்கொண்டுதான் இருக்கின்றேன் தொழில்நுட்பம் நம்மை அதிகம் பேச முடியமால் தடுக்கின்றது.எப்படி என்றால் கல்லூரியில் பக்கத்தில் அமர்ந்து இருந்தாலும் யாரும் பேசிக்கொள்ள மாட்டர்கள்.எல்லாம் சாட் மூலம்தான்.கூப்பிடும் தூரத்தில் இருந்தாலும் யாரும் வாயைத் திறந்து எதுவும் பேச மாட்டார்கள்.என்னையும் சேர்த்துதான்.நானும் இவர்களைப் போல்தான் ஆகிவிட்டேன்.கைத்தொலைப்பேசியை எடுத்துக்கொண்டால் யாரும் பேசுவது இல்லை.எல்லாம் குறுஞ்செய்தி மட்டும்தான்.சீங்கப்பூர் வந்து நான் பேசுவதும் குறைந்து விட்டது.அப்பா அம்மாவைத் தவிர மற்றவர்களிடம் எழுத்துவடிவத்தில் தான் தொடர்புக்கொள்கின்றேன்.நண்பர்களுடன் குறுஞ்செய்தி,சாட் என்று பொழுதுப் போகின்றது.இப்பொழுது வீட்டில் நான் அதிகம் பேசவில்லை என்று குற்றசாட்டு நிலவுகின்றது.சாட்டில் 5 மணிநேரம் பேசக்கூடிய என்னால் 5 நிமிடங்களுக்கு மேல் பேசமுடியமால் தவிக்கின்றேன்.