Saturday, July 29, 2006

புகிஸ் அனுபவங்கள்!

கடந்த வாரம் முழுவதும் புகிஸில் கழித்து விட்டடேன்.இந்த வாரம் தான் பதிவுகளை வெளிவிட நேரம் கிடைத்தது.அது என்ன புகிஸ் என்று நீங்கள் கேட்கலாம். என் தொழில்நுட்ப கல்லூரியில் ''youth entrepreneurship' என்று ஒரு புதிய திட்டத்தை இரண்டு வாரங்களுக்கு முன் அறிமுகப் படுத்தினார்கள்.இந்த திட்டத்தின் மூலம் மாணவர்கள் தங்கள் சொந்த தொழிலை ஆரம்பிக்கலாம்.இது என்னவென்றால் எங்கள் கல்லூரிக்கு சொந்தமான 12 தள்ளு வண்டிகள் புகிஸ் தேசிய நூலகத்தில் உள்ளது.இதை மாணவர்கள் வாடகை எடுத்து சொந்த தொழில் செய்யலாம்.
எங்கள் குழுதான் இந்த திட்டதின் முதன் முதலாக ஆரம்பித்து வைத்தது.இதில் முதலீடு இருந்து எந்த பொருளை விற்பது முதல் எல்லமே மாணவர்களின் கையில்தான்.எனக்கு சொந்த தொழில் செய்வதில் எல்லாம் அவ்வளவு ஆர்வம் இல்லை.ஆனால் ஒரு அனுபவத்திற்காக இதில் பங்கேற்றேன்.நல்ல அனுபவம்தான் என்னென்றால் எங்களுக்கு நஷ்டம் தான் கடைசியில் மிஞ்சியது.ஆனாலும் பரவயில்லை.தோல்விதான் வெற்றிக்கு படிகட்டுகள்.இந்த இரண்டு வாரங்களும் நல்ல அலைச்சல்.இப்பொதுதான் நிம்மதியாக இருக்கின்றது.
புகிஸில் எடுத்த சில புகைப்படங்கள் உங்கள் பார்வைக்கு........

எங்களின் தள்ளு வண்டி


Tarot card reading


மற்ற தள்ளு வண்டிகள்

நவீன தள்ளுவண்டிகள்....மடிப்பு கணினிகளுடன்





விற்ற சில பொருட்கள்(in other push carts)







கடைசியாக எல்லா பொருளையும் மூட்டைக் கட்டிவிட்டோம்

1 Comments:

Blogger மா சிவகுமார் said...

துர்கா,

நல்ல பயனுள்ள பதிவு. புகிஸ் பற்றி விளக்கி அழகிய புகைப்படங்களும் வெளியிட்டதற்கு நன்றி.

லேப்டாப்பிற்கு மடிக்கும் கணினி என்ற மொழிபெயர்ப்பு அருமை, பொதுவாக மடிக்கணினி என்று எழுதிக் கொண்டிருப்பேன். மடிக்கும் கணினியில் இருக்கும் தமிழ் இனிமை மடிக்கணினியில் இல்லை. இனிமேல் மடிக்கும் கணினிதான், நன்றி துர்கா :-)

அன்புடன்,

மா சிவகுமார்

10:45 PM  

Post a Comment

<< Home