Saturday, July 29, 2006

தொல்லைகள்

இன்று ஒரு சம்பவம் நடந்தது.இன்று இரயிலில் நேரிசல் அதிகம்.பசி மயக்கத்தோடு உட்கார கூட இடமில்லமால் தவித்துக் கொண்டிருந்தேன்.அந்த சமயம் யாரோ என்னிடம் பேசுவது போல் இருந்தது.திரும்பி பார்த்தால் ஒரு இந்திய பிரஜை ஆங்கிலத்தில் என்னிடம் பேசினான்.

அவன்: Excuse me.Please don't mistake me.I am just curious.Are you telegu?Because you look like a telegu

நான்:(தலையை மட்டும் இல்லை என்று ஆட்டினேன்.வாயில் இருந்து ஒரு வார்த்தைக் கூட வரவில்லை)


அவன்:So you are not telegu?You are not fro
m Andhara pradesh?

நான்:(தலையை தலையை மீண்டும் இல்லை என்று ஆட்டி விட்டு அவசரமாக ஒரு இடத்தில் அமர்ந்துக்கொண்டேன்)

என்னால் சிரிப்பை அடக்க முடியவில்லை.அந்த ஆள் முகத்திலோ ஈ ஆடவில்லை.சரி இதற்கு அப்புறம் நம்மகிட்ட வால் ஆட்ட மாட்டான் என்ற நம்பிக்கையில் அமைதியாக அமர்ந்து இருந்தேன்.தீடிரென்று பார்த்தால் அந்த ஆள் பக்கத்தில் வந்து அமர்ந்துக் கொண்டான்.சரி ஏதவாது வால் ஆட்டினால் பார்த்துக்கொள்வோம் என்று நானும் அமைதியாக இருந்தேன்.

நானும் ஒர கண்ணால் அவன் என்னதான் செய்கிறான் என்று பார்த்தேன்.பெரிய நேட்டு புத்தகம் ஒன்றையும் எதோ கணினி programming புத்தகம் ஒன்றையும் எடுத்துக்கொண்டு ஆர்வமாய் எழுத ஆரம்பித்தான்.எழுதினான் எழுதினான் எழுதிக்கொண்டே இருந்தான் நான் இறங்கும் இடம் வரும் வரை.கடைசியாக நான் இறங்குவதைப் பார்த்துக்கொண்டே இருந்தான்.நானும் எதுவுமே தெரியாதது போல் வந்து விட்டேன்.இருந்தாலும் கொஞ்சம் கூடவேதான் அந்த ஆள் சீன் போட்டான்.அவனைப் பார்கவே பயமாக இருந்தது.யாருக்கு தெரியும் எந்த புற்றில் எந்த பாம்பு இருக்கும் என்று?அப்பாவிடம் இதைப் பற்றிச் சொல்லிச் சிரித்துக்கொண்டேன்.


சரி நான் தென்னிந்திய பெண் போலதான் இருக்கின்றேன்.ஆனால் இதைப் பற்றி அவன் கேட்க வேண்டிய அவசியம் என்ன?தேவையில்லாமல் புத்தகத்தை வைத்துக்கொண்டு பீத்தல் வேற.அவன் இங்கு வந்ததோ பிழைப்பு தேடி.வந்த வேலையைப் பார்க்கமால் பெண்களைப் பார்த்து வழிவது சரிதானா?நான் ஒரு சாதாரணமான விஷயத்தைப் அதிகமாக அலட்டி கொள்வது போல் உங்களுக்குத் தோன்றலாம்.எதோ சொல்ல வேண்டும் என்று என்று நினைத்தேன்......சரி அடுத்த வாரம் மறுபடியும் தலை வலி அதுதான் சோதனை.முதல் தவணை முடிய இன்னும் சில வாரங்கள் தான் உள்ளது.அதன் பிறகு ஒரு மாதம் விடுமுறை.அம்மாவைப் பார்க்க வேண்டும் என்று அவா.ஆனால் 5 நாட்களுக்கு மேல் மலேசியாவில் தங்க முடியாத சூழ்நிலை........

11 Comments:

Blogger மா சிவகுமார் said...

நல்ல அனுபவம்.

தமிழ்ப் பெண்களுக்கும் பையன்களுக்கும் எந்த ஊரிலும் ஒரே அனுபவம்தான் போலிருக்கிறது :-) அந்த ஆள் கொஞ்சம் பேச்சுக் கொடுத்து நட்பு பிடிக்கப் பார்த்திருப்பார். நீங்கள் ஏன் இப்படித் தலை தெறிக்க ஓட வேண்டும்? நீங்கள் சொல்வது போல கணினிப் புத்தகம் நோட்டு எல்லாம் பீலாதான் என்று படுகிறது. :-)

நல்ல ஆற்றொழுக்கான நடை. சந்திப் பிழைகளைக் கொஞ்சம் பாருங்கள்.

நான் எழுதும் போதும் சந்திகள் பலமுறை தவறி விடுகின்றன. எங்க அம்மா, தமிழாசிரியராக இருந்தும் தமிழில் சந்திப் பிழை இல்லாமல் எழுத வரவில்லை.

அன்புடன்,

மா சிவகுமார்

10:50 PM  
Blogger t.h.u.r.g.a.h said...

சிரிப்புதான் வருகின்றது நான் ஒடிய ஒட்டத்தைப் பார்த்து.நான் இங்குதான் வாய் கிழிய பேசுவேன்.ஆனால் நிஜ வாழ்க்கையில் பயந்த சுபாவம் கொண்டவள்.உங்கள் பின்னோட்டதிற்கு நன்றி

11:00 PM  
Blogger பொன்ஸ்~~Poorna said...

என்னங்க துர்கா இப்படி ஓடி வந்துட்டீங்க.. பேச்சு கொடுத்துப் பார்த்திருந்தா இன்னும் நாலு இடுகைக்கு சீன் தேறி இருக்கலாங்க!!! :)

8:37 PM  
Blogger t.h.u.r.g.a.h said...

it's ok இந்த மாதிரி அனுபவங்கள் எல்லாம் நிறைய இருக்கின்றது.அந்த லூசுயிடம் பேசியிருந்தால் சீன் வந்திருக்கும்.கூடவே தலை வலியும் சேர்ந்து வந்திருக்கும்.ஆகவே எனக்கு ஓடுவதுதான் நல்லது.

9:35 PM  
Blogger அருள் குமார் said...

அயல்நாட்டில் தொந்த ஊர் முகங்களைப் பார்க்கையில் பேசவேண்டுமென்ற ஆவல் எழுவது இயல்புதானே...

இதற்கு 'வாலாட்டுகிறான்', 'பார்க்க பயமாயிருக்கிறது' என்பதெல்லாம் கொஞ்சம் ஓவராக படுகிறது. ஏதோ எனக்குத் தோன்றியது...

6:21 PM  
Blogger t.h.u.r.g.a.h said...

சரி சொந்த முகம் பார்த்து என்றால் ஒரு ஆணைப் பார்த்து பேச வேண்டியது தானே?நான் பார்த்து பயந்ததிற்கு காரணங்கள் பல உள்ளன.என்னென்றால் ஏற்கனவே இந்த மாதிரி ஒரு கசப்பான அனுபவம் உண்டு.

7:26 PM  
Blogger வடுவூர் குமார் said...

எங்க வீட்டுக்கு பக்கத்தில் இப்படி ஒரு தமிழ் எழுத்தாளினியா?
எழுதும் நடை நன்றாக உள்ளது.
வாழ்த்துக்கள்.

8:27 AM  
Blogger t.h.u.r.g.a.h said...

வாழ்த்துகளுக்கு நன்றி

9:17 AM  
Blogger - யெஸ்.பாலபாரதி said...

ஒரு வேலை அவரும் கூட தமிழராகவோ, தென்னிந்தியராகவோ இருந்திருக்கலாம்.
நான் தமிழகத்தை விட்டு மும்பை ,டெல்லி போன்ற நகரங்களில் வாழ் நேர்ந்த போது எதிரில் படும், தமிழராக தோன்றும் எல்லோரிடமும் வழியச் சென்று பேசுவேன்.
அதற்கான காரணங்களை இப்படி சொல்லலாம்..
1. அவர்கள் அந்த ஊரில் பிறந்தவர்களாக இருந்தால்.. அவர்களின் தாய் மொழியை எப்படி கற்றுக்கொண்டார்கள் என்று கேட்கலாம்.
2. அதே ஊரில் வசிப்பவர்களாக இருந்தால்..அவ்வூர் பற்றி, தமிழிலேயே கேட்டு அறிந்து கொள்ளலாம்.
3. நம் மொழிக்காரர்கள் பெரிய மனிதர்களைப் பற்றி அறிந்து கொள்ள முடியும்..
--- இப்படி பல காரணங்கள். ஆனாலும் அவரை நீங்கள் புறந்தள்ளியது உங்கள் விருப்பம்.. ஆனால்.. அதற்காக அவர் உங்களிடம் அப்படி கேட்டது தவறானதாக எனக்குப் படவில்லை.

1:03 PM  
Anonymous Anonymous said...

ஹிஹி அதுக்கு இப்படியா துர்க்கா ஓடுறது?..... ம்ம்ம் சரி ரசிக்கவைக்கிற மாதிரி எழுதிறீங்க.

9:55 PM  
Anonymous Anonymous said...

உங்க ஊரில் ஏதோ ஓர் அயல் நாட்டு இந்தியர் பேசினால்.. சீன் போடுவதாகத் தான் எண்ணத் தோன்றுமோ.. பாவம்.. சக இந்தியர் என்று ஆர்வமடைந்திருக்கலாம்.. இங்கு இப்போதெல்லாம் வெளிநாட்டவர்களுடைய ஆதிக்கம்தான் அதிகம்.. எங்கேயாவது ஏதாவது ஒரு இந்தியரை பார்த்துவிட்டால் நம்மையறியாமலே உற்சாகம் பிறந்துவிடுகிறது...

8:37 PM  

Post a Comment

<< Home