Sunday, July 30, 2006

தமிழா?ஆங்கிலமா?

இன்று முதன் முறையாக சிவகுமாரிடம் சாட் (chat)பண்ணினேன்.எங்கள் அரட்டைக்கு ஒரு முடிவே இல்லாமல் பல மணி நேரம் பேசிக்கொண்டோம்.ஏதோ பல வருடம் அவரைத் தெரிந்த மாதிரி ஒரு உணர்வு.அவர் மேல் உள்ள மரியதை இன்னும் அதிகரித்தது.என்னைப் பற்றி அவரின் வலைப்பகுதியில் புகழ்ந்து தள்ளி விட்டார்.(தரையில் என் கால் இருகின்றதா என்று பார்க்க வேண்டும். )

அண்ணனும் அண்ணியும் மலேசியாவிற்குச் சென்று விட்டார்கள்.அந்த சின்ன வாண்டு(என் அண்ணன் மகன் aka என் மருமகன்) இல்லமால் வீடே அமைதியாக உள்ளது.அவன் மட்டும் இருந்தால் சண்டைப் போட்டுக் கொண்டு இருக்கலாம்.என்ன பெண் நீ சின்ன குழந்தையிடம் எல்லாம் சண்டைப் போடுகின்றாய் என்று நீங்கள் எல்லாம் ஏசலாம்.ஆனால் அதில் உள்ள சுகமே தனி.அந்த சின்ன பொடியன் சொல்லும் பதில்கள் எல்லாமே ஒரு தனி சுகம்தான்.அவனின் அந்த மழலை பேச்சைக் கேட்கும் பொது மனம் பூரித்துப் போகும்.வயது 2 தான் ஆகின்றது.பேச்சு சரியாக வரவில்லை என்றாலும் சரியான வாயாடி.ஒரு சமயம் நானே பதில் சொல்ல முடியமால் திக்கு முக்காடி போய் விடுவேன்.

ஆனாலும் மனதில் ஒரு குறை.அவன் பேசுவது எல்லாம் ஆங்கிலம்தான்.எப்பொழுதுதாவது தமிழ் வார்த்தைகள் வாயில் வரும்.அப்பொழுது எல்லாம் அண்ணன் ருத்ர தாண்டவம் ஆடிவிடுவார்.என் அண்ணனும் அண்ணியும் அவன் ஆங்கிலத்தில் பேச வேண்டும் என்று கட்டயப்படுத்துகின்றார்கள்.நான் தமிழ்ப்பள்ளியில் படித்த மாணவிதான்.24 மணி நேரமும் தமிழைதான் என் பெற்றொர்கள் பேசுவார்கள்.இன்று நான் சீங்கப்பூரில் அதுவும் ஆங்கிலத்தில் கல்வி கற்கின்றேன்.கல்லூரியில் என்னால் ஆங்கிலம்தான் பேச முடியவில்லையா என்ன?தாய் மொழியை மறக்கும் பொழுது நமது அடையாளங்கள் காணமால் போகின்றது என்று யாரும் உணரவில்லை.

என்னால் இங்குதான் புலம்ப முடியும்.என் பேச்சை அவர்கள் கேட்க போவது இல்லை.என்னால் செய்ய முடிந்து எல்லாம் வருங்காலத்தில் என் பிள்ளைகள் இப்படி தமிழை மறக்கமால் இருக்க செய்வதுதான்.நல்ல வேளை என் அப்பா என்னைத் தமிழ் பள்ளியில் படிக்க வைத்தார்.இல்லையென்றால் நானும் என் அண்ணன் மாதிரிதான்........

4 Comments:

Blogger vinothkumar said...

Hi thurgs,i thnk ur doing a very good job out here. goog n keep on going, jus one thng i saw many blogs named kirukalkal so u hav to change urs. find smethng diffrent.

12:20 PM  
Blogger t.h.u.r.g.a.h said...

hehe...ok lah let's see how.for now i am hiding my blog till i can improvise a bit...

12:29 PM  
Anonymous Anonymous said...

இனிக்குத்தான் உங்க வலைப்பதிவைப்பார்த்தேன். சரி முன்னாடி இருந்து படிப்போம் அப்டீன்னு சொல்லிட்டு வந்து படித்தேன். தொடக்கமே நல்லவிஷயத்தோடு அதுவும் அழகாக எழுதிறீங்க பாராட்டுக்கள்!!

9:49 PM  
Anonymous Anonymous said...

உங்களுடைய ஆதங்கம் புரிகிறது.. ஆனாலும் வாழ்த்துகள்... தமிழ்ப்பள்ளியில் பயின்றதை ஒரு குறையாக கருதுவோர் பலர் இங்கிருக்க.. உங்களுடைய தமிழார்வத்தை நிச்சயமாக பாராட்டித்தான் ஆகவேண்டும்.. சபாஷ்

8:25 PM  

Post a Comment

<< Home