Wednesday, August 02, 2006

!!!!!!!!!!!!!!!!!!!!!!!!

சில நாட்களுக்கு முன்பு ஜொள்ளு பாண்டியின் வலைப்பதிவைப் பார்க்க நேர்ந்தது.ஒரு சாதாரண டி சார்ட் வாசகத்தைப் பார்த்து அவர் ரொம்ம புலம்பிட்டார்.இவர் மட்டும் சீங்கப்பூரில் இருந்தால் என்ன ஆவரோ?சீங்கப்பூரில் நான் பார்த்த அனுபவங்களைப் பற்றி நான் இங்கு சொல்கின்றேன்.

சீங்கப்பூர் வந்து 4 மாதங்கள்தான் ஆகின்றது.அதற்கு முன்பும் இங்கு வந்த அனுபவம் உண்டு.இரயில் பயணம் சமயத்தில் மிகவும் சங்கடப்படுத்தும்.ஏன் என்றால் ஒரு ஆணும் பெணும் இறுக்கி அணைத்துக்கொண்டு முத்தம் கொடுத்துக்கொண்டிருந்தால் எப்படி இருக்கும்?அதனால் எப்பொழுதும் இரயில் தலை நிமிரமால் உட்கார்ந்துக் கொண்டிருப்பேன்.

சரி இரயில் தான் இப்படி என்றால் அன்று பேரங்காடியில் இரண்டு பேர் மின்படிகட்டில் வாயோடு வாய் வைத்து முத்தம் கொடுத்துக் கொண்டிருந்தார்கள்.எனக்கு என்ன சந்தேகம் என்றால் எப்படி இவர்கள் விழமால் படியில் இருந்து இறங்கினார்கள் என்று தான்.இது ரொம்ப முக்கியமா என்று நீங்கள் கேட்கலாம் ஆகவே என் ஆராய்ச்சியை இதோடு நிறுத்திக்கொள்கின்றேன்.

அன்று என் அக்கவோடு பூங்காவில் நடந்துக்கொண்டிருந்தேன்.ஒரு புதரின் அருகே இரண்டு பேர் கட்டிப்பிடித்துக் கொண்டிருந்தனர்.சரி அது கூட ஒரு வகையில் என்னால் ஜீரணிக்க முடிந்தது.ஆனால் அந்த பெண்னின் வயது 13 இல்லை 14 தான் இருக்கும்.சரி வெளியேதான் தொல்லை தங்க முடியவில்லை என்றால் கல்லூரியில் இதற்கு மேல் தொல்லை.

அங்கு இந்த பெண்களின் ஆடைகளைப் பார்த்து எனக்கு தலையே சுற்றிவிட்டது.நான் மலேசியாவில் பிறந்து வளர்ந்த பெண் என்றாலும் இது எல்லாம் எனக்கு புதிது.சரி உடைகள் மட்டும் இப்படி என்றால் பரவயில்லை.அன்று கல்லூரி உணவகத்தில் நான் சில நண்பர்களுடன் பேசிக்கொண்டிருந்தேன்.அப்பொழுது என் தோழி ஏதோ ரகசியமாய் எங்களிடம் கிசுகிசுத்தாள்.எங்கள் முன் இருந்த பெண் அவள் காதலனுடன் ......சரி அந்த கன்றாவியைப் பற்றி எழுதினால் அசிங்கம்.

சரி பெண்கள் மட்டும் இப்படியில்லை.இந்த ஆண்களின் தொல்லையும் தங்க முடியவில்லை.நல்ல வேலை எனக்கு சுயக்கட்டுபாடு கொஞ்சம் அதிகம்.ஆகவே இது எல்லாம் என்னை அவ்வளவு அதிகமாக பாதிக்கவில்லை.முதலில் கஷ்டமாக இருந்தாலும் போக போக எனக்கு இந்த மாதிரி விஷயங்கள் எல்லாம் சாதாரணமாக எடுத்துக்கொள்ள கூடிய மனப்பக்குவம் வந்துவிட்டது.
சரி அதற்கு என்று சீங்கப்பூரில் இருக்கும் அனைவரும் இப்படிதான் இருப்பார்கள் என்று முடிவிற்கு வந்துவிடாதீர்கள்.சரி நாளைத் தேர்வுக்குப் படிக்க வேண்டும்........bye bye

8 Comments:

Blogger ஜொள்ளுப்பாண்டி said...

ஆஹா துர்கா இதுதான் நீங்க சொன்ன சிங்கபூர் சமாசாரமா??:))) ரொமப குஜால்ஸா இருகும்போல இருக்கே !!!

நான் பொலம்பப் காரணம் என்னன்னா இது கொஞ்சம் புதுசுங்க சென்னைகு அதுதான் :)

9:42 AM  
Blogger t.h.u.r.g.a.h said...

நானும் இந்த ஊருக்குப் புதுசு!உங்கள் கருத்துகளுக்கு நன்றி

10:40 AM  
Blogger மா சிவகுமார் said...

நல்ல எழுதியிருக்கீங்க, துர்கா. தமிழ் நல்ல இயல்பான நடையில் எழுதிறீங்க. தொடர்ந்து தினசரி எழுதுங்க.

அன்புடன்,

மா சிவகுமார்

11:48 AM  
Blogger ஜொள்ளுப்பாண்டி said...

என்னாங்க துர்கா 'குஜால்ஸ்'ன்னு எனான்னு கேட்டிருக்கீங்க !! :))
குஜால்ஸுன்னா கொஞ்சம் அதிகப்படியான சந்தோசம்னு வச்சுக்கலாம் :) விளக்கம் போதுமா ??:))

12:33 PM  
Blogger t.h.u.r.g.a.h said...

Jollz,
நீங்கள் பயன் படுத்தும் தமிழிற்குப் புதிதாய் அகராதிதான் தேவைப்படுகின்றது.கொஞ்சம் நீங்கள் பேசும் இந்த தமிழையும் கொஞ்சம் கற்றுத்தருங்கள்.

8:16 PM  
Blogger ஜொள்ளுப்பாண்டி said...

//Jollz,
நீங்கள் பயன் படுத்தும் தமிழிற்குப் புதிதாய் அகராதிதான் தேவைப்படுகின்றது.கொஞ்சம் நீங்கள் பேசும் இந்த தமிழையும் கொஞ்சம் கற்றுத்தருங்கள். //

:))))))))
என்னாங்க துர்கா நான் எழுதும் தமிழ் புரியவில்லையா !! ஐயகோ என் செய்வேன் !! செந்தமிழ் உரைக்கவா தீந்தமிழ் உரைக்கவா? :))

சரி சரி துர்கா இதெல்லாம் சங்கம் வைத்து தமிழ் வளர்த்த தமிழ்நாட்டின் தேவ பாஷை :)) உங்களுக்காக ஒரு தமிழ் அகராதி போட்டுட்டா போச்சு !! புரியாதவற்றை தனி மடலில் தெரியப்படுத்தவும் !!:)

8:25 PM  
Blogger t.h.u.r.g.a.h said...

என்ன தேவ பாஷையோ.....!!!??தலையும் புரியவில்லை வாலும் புரியவில்லை.

9:38 PM  
Blogger ரவி said...

This comment has been removed by a blog administrator.

10:40 PM  

Post a Comment

<< Home