Thursday, August 10, 2006

10/08

இன்று எனது பேராசிரியர் எங்கள் கல்லூரியில் கற்பிப்பது இதுவே கடைசி நாள்.ஆகவே எங்களுக்கு எல்லாம் மிட்டாய் எல்லாம் கொடுத்தார்.இந்த அறுந்த வாலுங்களை இதன் பிறகு பார்க்க வேண்டாம் என்ற சந்தோசம் போல் அவருக்கு.கடைசியாக அறிவுரை எல்லாம் சொன்னார்.எனக்கு ஞாபகம் இருப்பது எல்லாம் அவர் நேர்மை பற்றி சொன்னதுதான்.
"Integrity is very important to your future work life.If you have lost it once it is very difficult to gain it back.So always remember this."என்று சொன்னார்.கண்டிப்பாக இதை மறக்க மாட்டேன்.

அப்புறம் இன்று எல்லாரும் அடுத்த வாரம் வகுப்புக்கு மட்டம் போட்டு விட்டு விலங்குக் காட்சிச் சாலைக்குச் செல்வதைப் பற்றி திட்டம் திட்டிக்கொண்டிருந்தார்கள்.ஏற்கனவே இங்கு அப்படிதான் உள்ளது.இதில் விட்டு விலங்குக் காட்சிச் சாலைக்குச் செல்ல வேண்டுமா?வகுப்பில் நான் மட்டும் இருந்தாலும் பரவயில்லை, நான் கல்லூரிக்குச் செல்வதாக முடிவு எடுத்து உள்ளேன்.எற்கனவே எனது தேர்வு மதிப்பெண்கள் மிகவும் கேவலமா இருக்கின்றது.இதில் மட்டம் போட்டு விட்டு ஊர் சுற்ற இஷ்டமில்லை.

இன்று என்னுடன் படிக்கும் சக மாணவி ஒருத்திக்கும் அவளின் குழுவினர்க்கும் கருத்து வேறுப்பாடு.கோபத்தில் கதவைப் வேகமாக மூடிவிட்டு சென்றுவிட்டாள்.அதுவும் பேராசிரியர் முன்னிலையில்.அப்புறம் அவளின் காதலன் திறந்த வீட்டில் எதோ ஒன்று நுழைவது போல் சட்டென்று வகுப்பில் புகுந்து விட்டான்.கதவைத் தட்டிக்கொண்டு வர வேண்டும் என்ற ஒரு சாதாரண விஷயம் கூட அவனுக்குத் தெரியவில்லை.அப்புறம் அவன் பாட்டுக்கு அவளின் பொருட்களை எடுத்துக்கொண்டு என் வகுப்பு தோழர்களைக் நன்றாக ஏசிவிட்டு சென்றுவிட்டான்.இது அனைத்தும் எங்கள் பேராசிரியர் முன்னால் தான் நடந்தது.அவரும் கண்டும் காணாமலும் இருந்து விட்டார்,இதுங்களை எல்லாம் ஏசி/ அடித்து திருத்த முடியாது.17 வயது ஆகிவிட்டது.இன்னும் நாகரிகம் தெரியவில்லை.

2 Comments:

Blogger - யெஸ்.பாலபாரதி said...

நல்லா இருக்குங்கம்மா..
//"Integrity is very important to your future work life.If you have lost it once it is very difficult to gain it back.So always remember this."//

எல்லோருமே நினைவில் நிறுத்திக்கொள்ள வேண்டிய வரிகள்.
எழுத்து நடை நல்லா இருக்கு.
அதே சமயம் ஏதோ அடுத்தவரின் டைரியை திருட்டுத் தனமாக படிப்பது போன்ற உணர்வும் ஏற்படுகிறது.

11:03 AM  
Blogger மா சிவகுமார் said...

நல்ல துள்ளல் நடை உங்களுக்கு துர்கா, நகைச்சுவை இளையோடுகிறது. தொடர்ந்து நிறைய எழுதுங்கள்.

அன்புடன்,

மா சிவகுமார்

10:11 PM  

Post a Comment

<< Home