Wednesday, August 09, 2006

விடுமுறை

இன்று சீங்கப்பூரின் பிறந்த நாள்.அதாவது சுதந்திர தினம்.எங்கு பார்த்தாலும் சீங்கப்பூருக்குப் பிறந்த நாள் வாழ்த்துக்கள் என்ற வாசகம் கண்ணில் பட்டது.நேற்று வரையிலும் சீங்கப்பூரின் சுந்திர தினத்தைப் பற்றி ஞாபகமே வரவில்லை.இன்று கல்லூரி விடுமுறை என்று கூட மறந்து விட்டேன்.நல்ல வேளை என் தோழி இன்று கல்லூரி இல்லை என்று சொன்னாள்.இல்லையென்றால் .......எல்லாம் ஒரு ஆர்வ கோளறுதான்.ரொம்ப படித்து விடுமுறைக்கூட மறந்துப்போயிற்று.

நேற்றுதான் சீங்கப்பூர் வந்த மாதிரி இருக்கின்றது.அதற்குள் 5 மாதங்கள் ஆகிவிட்டது.நாளை இன்னும் ஒரு பரீட்சை உள்ளது.அடுத்த வாரத்தோடு சோதனைகள் முடிந்துவிடும்.இன்னும் ஒரு வாரத்தில் அம்மாவைப் பார்க்க போகின்ற மகிழ்ச்சி எனக்கு.

சூரியாவிற்கும் ஜோதிகாவிற்கும் கல்யாணம் என்ற செய்தியை குறுஞ்செய்தி மூலம் என் தோழிக்குத் தெரிவித்தேன்.அவள் ஒரு சூரியா விசிறி....பைத்தியம் என்றே வைத்துக்கொள்லாம்.பாவம் ரொம்ப மனது உடைந்து போய்விட்டாள்.எனக்கு இனிமேல் நிம்மதி....சூரியா பற்றி அவளின் பினத்தல்களைக் கேட்க வேண்டாமே!

இன்று கல்லூரி இல்லமால் வீட்டில் இருக்க கஷ்டமாக இருந்தது.இதில் இந்த பிரணாவ்(அண்ணனின் மகன்)இன்று கார்டுன் என்று என் கணினியுடன் அமர்ந்து விட்டான்.எனக்கு எல்லாம் 17 வயதில் தான் கணினியை எப்படி பயன்படுத்துவது என்று தெரியும்.இந்த பொடுசு இப்பொழுதே கணினியில் தட்டச்சு செய்ய வேண்டும் என்று அடம் பிடிக்கின்றது.இந்த காலத்து பொடுசுகள் நம்மை விட ரொம்ப வேகம்தான்......

பிராணவ்க்கு கூடிய விரைவில் தம்பி/தங்கைப் பிறக்கலாம்.....எப்படி இருந்தாலும் எனக்கு வருங்காலத்தில் அடி நிச்சயம்.இப்பொழுதே இவனிடம் அடி வாங்குகின்றேன்.எற்கனவே 2 குட்டி பிசாசுகள் மலேசியாவில் என்னை அடிக்க காத்துக்கொண்டிருக்கின்றன....நான் ரொம்ப பாவம்.என்னதான் அடிவாங்கினாலும் இந்த குட்டிபிசாசுகள் மேல் எனக்கு ஒரு தனிபாசம் தான்.இன்னைக்கு இந்த புலம்பல்கள் போதும்.....

4 Comments:

Blogger - யெஸ்.பாலபாரதி said...

நல்லா எழுதுறீங்க... தொடருங்கள்.
சிங்கையின் சுதந்திர தினம் குறித்து.. அவர்கள் அடிமைகளா இருந்தகாலம் குறித்தும் செய்தி சேகரித்து எழுதுங்களேன்...

12:48 PM  
Blogger - யெஸ்.பாலபாரதி said...

This comment has been removed by a blog administrator.

12:50 PM  
Blogger ஜொள்ளுப்பாண்டி said...

ஒரு டைரியை படிப்பது போல் இருக்கிறது துர்கா !! நன்றாக இருக்கிறது !தொடரட்டும் நினைவுகள் :)

6:30 PM  
Blogger மா சிவகுமார் said...

துர்கா,

கொஞ்ச நாள் உங்க பக்கம் எட்டிப் பார்க்கவில்லை. நிறைய பதிவுகள் போட்டு விட்டீர்களே! இன்னும் பல குழந்தைகளிடமிருந்து அடி வாங்க வாழ்த்துக்கள் :-)

அன்புடன்,

மா சிவகுமார்

10:09 PM  

Post a Comment

<< Home