Thursday, August 17, 2006

16?

தேர்வுகள் எல்லாம் முடிந்து விட்டது.ஒரே மகிழ்ச்சிதான் எனக்கு.அடுத்த தவணை வரை சற்று நிம்மதியாக இருக்கலாம்.இருந்தாலும் விடுமுறையிலும் படிக்க வேண்டும்.முக்கியமாக இந்த பௌதிகத்தைக் கரைத்துக் குடிக்க வேண்டும்.இந்த மண்டையில் பௌதிகம் ஏறுவது சற்று கடினம்தான்.இருந்தாலும் முயற்சியை விடக்கூடாது.

இன்று வகுப்பில் மொத்தம் 8 பேர்கள் இருந்தோம்.பாவம் எங்கள் புது பேராசிரியர்.இன்றுதான் முதல் முறையாக எங்களுக்கு பாடம் கற்பிக்க வந்தார்.அவர் பெயரைக் கூட முதலில் சொல்லவில்லை.நான் கேட்ட பொழுது தான் பெயரைச் சொன்னார்.அவர் எங்கள் எண்ணிக்கையைப் பார்த்த அதிர்ச்சியில் பெயரைச் சொல்ல மறந்துவிட்டார் என்று சொன்னார்.அவர் இந்த அளவிற்குக் குறைவான மாணவர்களைப் பார்க்கவில்லை என்றார்.அவர் கெட்ட நேரம் என் நண்பர்கள் அனைவரும் இன்று கல்லூரிக்கு மட்டம் போட்டு விட்டு மிருகக்காட்சி சாலைக்குச் சென்றுவிட்டார்கள்.

அதன் பிறகு சில கேள்விகளுக்குப் பதிலளிக்கச் சொன்னார்.முதல் கேள்வியே சற்று கடினமாக இருந்தது.'How do you feel about this module – in general? Or when you talk to your friends in other polys or JCs about their learning experiences? '

எனக்கு என் தொழில்நுட்ப கல்லூரியில் உள் நண்பர்களைத் தவிர வேறு யாரையும் தெரியாது.”மார்க் எனக்கு சீங்கப்பூரில் வேறு கல்லூரியில் தோழர்கள் யாரும் இல்லை” என்று சொன்னேன்.மார்க் எனது பேராசிரியர் பெயர்.அவர்தான் அவரை அப்படி கூப்பிட சொன்னார்.
“ஏன் இல்லை”
“நான் மலேசியாவில் இருந்து வந்துள்ளேன் எனக்கு இங்கு நண்பர்கள் மிகவும் குறைவு”.
“சரி மலேசியாவில் உள்ள உன் நண்பர்களைப் பற்றி எழுது”.
“மலேசியாவில் என் வயது நண்பர்கள் யாரும் தொழில்நுட்ப கல்லூரியில் படிக்கவில்லை”.
“உனக்கு வயது என்ன?”
“நீங்களே யுகித்துக்கொள்ளுங்கள்”
“16?18?”
“இல்லை மார்க் எனக்கு வயது 2_” (age is secret)
“சரி அப்படியென்றால் உனது பல்கலைகழக நண்பர்களைப் பற்றி எழுது” என்று சொல்லிவிட்டார்.

இது வரையிலும் அனைவரும் என் வயது 18 இல்லை 19 என்றுதான் சொல்வார்கள்.இவர் மட்டும்தான் 16 என்று ஏமாந்துப்போன முதல் ஆள்.இன்று வகுப்பும் 12 மணிக்குள் முடிவடைந்துவிட்டது.என் வேலைகளைச் சீக்கரம் முடித்துவிட்டு செல்லா அண்ணாவுடன் சற்று நேரம் ‘சாட்’ செய்துக்கொண்டிருந்தேன்.அவர் என்னவென்றால் நான் சன் டிவி தமிழில் பேசுகின்றேன் என்று சொல்லிவிட்டார்.ஐயகோ நான் என்ன செய்வேன்?அதிகம் ஆங்கிலம் பேசுவதால் தமிழ் மட்டமாக பேசுகின்றேனோ?

அப்புறம் இன்று காலையிருந்து ஒரு ரொட்டித்துண்டைத் தவிர வேறு ஒன்றும் சாப்பிடவில்லை.பசி உயிரை எடுக்கின்றது.இப்பொழுதுதான் அண்ணி இட்டலி சுட்டுக்கொண்டு இருக்கின்றார்.சரி நான் போய் இட்டலியை ஒரு புடி புடிக்க வேண்டும்.

4 Comments:

Blogger ஜொள்ளுப்பாண்டி said...

//எங்கள் எண்ணிக்கையைப் பார்த்த அதிர்ச்சியில் பெயரைச் சொல்ல மறந்துவிட்டார்//

//ஐயகோ நான் என்ன செய்வேன்?அதிகம் ஆங்கிலம் பேசுவதால் தமிழ் மட்டமாக பேசுகின்றேனோ?//

என்னாங்க அம்மணி துர்கா :)) உங்க எழுத்து ரொம்ப வேகமா முன்னேறிகிட்டு இருக்கு !! பரவாயில்லையே மிக நல்ல தமிழ் எழுதுகிறீர்களே !! :))

காலேஜுக்கு போறீங்களா ? அப்போ பல விசயம் கெடைக்குமே எழுத ! நெறையா எழுதுங்க அம்மணி :)))

9:04 PM  
Blogger மா சிவகுமார் said...

துர்கா,

ஏமாந்துட்டீங்களே. முதல் இலக்கத்தை மறைத்து விட்டு இரண்டாவது இலக்கத்தை சொல்லியிருக்கலாமே! இப்போது எல்லோருக்கும் நீங்கள் இருபதை தாண்டி விட்டீர்கள் என்று தெரிந்து விட்டது :-)

அன்புடன்,

மா சிவகுமார்

10:37 PM  
Blogger t.h.u.r.g.a.h said...

பரவயில்லை அண்ணா.அனைவரும் என் வயதின் முதல் இலக்கத்தைத் தவறாக சொல்லுகின்றனர்.சரி பதிவிலும் யாரும் தவறாகச் சொல்லக்கூடாது என்று தான் 2_ என்று இருக்கின்றது,செல்லா அண்ணாதான் பெண்கள் வயதைச் சொல்லக்கூடாது,ஆண்கள் சம்பாத்தியத்தைச் சொல்லக்கூடாது என்று வசனம் எல்லாம் சொன்னார்.சரி என்று வயதை மறைத்து விட்டேன்.

11:17 AM  
Blogger t.h.u.r.g.a.h said...

என்ன பண்ணுவது ஜொள்ளு சார்.உங்கள் அளவிற்கு லொள்ளு இருந்தால் கல்லூரியைப் பற்றி சுவராசியமாக எழுதலாம்.உங்களிடம் இருந்து இப்பொழுதுதான் அதைக் கற்றுக்கொண்டிருக்கின்றேன்.எழுதுறேன்.........கூடிய விரைவில்......

11:21 AM  

Post a Comment

<< Home