Sunday, August 06, 2006

நான் பேச நினைப்பது எல்லாம் ________

நானும் பார்த்துக்கொண்டுதான் இருக்கின்றேன் தொழில்நுட்பம் நம்மை அதிகம் பேச முடியமால் தடுக்கின்றது.எப்படி என்றால் கல்லூரியில் பக்கத்தில் அமர்ந்து இருந்தாலும் யாரும் பேசிக்கொள்ள மாட்டர்கள்.எல்லாம் சாட் மூலம்தான்.கூப்பிடும் தூரத்தில் இருந்தாலும் யாரும் வாயைத் திறந்து எதுவும் பேச மாட்டார்கள்.என்னையும் சேர்த்துதான்.நானும் இவர்களைப் போல்தான் ஆகிவிட்டேன்.கைத்தொலைப்பேசியை எடுத்துக்கொண்டால் யாரும் பேசுவது இல்லை.எல்லாம் குறுஞ்செய்தி மட்டும்தான்.சீங்கப்பூர் வந்து நான் பேசுவதும் குறைந்து விட்டது.அப்பா அம்மாவைத் தவிர மற்றவர்களிடம் எழுத்துவடிவத்தில் தான் தொடர்புக்கொள்கின்றேன்.நண்பர்களுடன் குறுஞ்செய்தி,சாட் என்று பொழுதுப் போகின்றது.இப்பொழுது வீட்டில் நான் அதிகம் பேசவில்லை என்று குற்றசாட்டு நிலவுகின்றது.சாட்டில் 5 மணிநேரம் பேசக்கூடிய என்னால் 5 நிமிடங்களுக்கு மேல் பேசமுடியமால் தவிக்கின்றேன்.

0 Comments:

Post a Comment

<< Home