Tuesday, August 15, 2006

இன்று எனது கடைசி தேர்வு முடிவடைந்தது.சற்று கடினம் தான்.ஆனால் அனைத்து கேள்விகளுக்கும் விடை அளித்துவிட்டேன்.அடுத்த வாரத்தோடு கல்லூரியின் முதல் தவணை முடியப்போகின்றது.ஒரு மாதத்திற்கு நல்ல ஊர் சுற்றப்போகின்றேன்.கணினி முன் நேரத்தைச் செலவழித்து சலித்துப்போய் விட்டது.தனியாக ஊர் சுற்றதான் சற்று கஷ்டமாக இருக்கின்றது.என்ன பண்ணுவது?அடுத்த தவணை புதிய வகுப்பிற்கு மாறி செல்ல வேண்டும்.மறுபடியும் புதிய நண்பர்கள், புதிய சூழ்நிலை.என்னால் சமாளிக்க முடியும் என்று நம்பிக்கை உள்ளது.ஆனால் இந்த தேர்வுகள்தான் சற்று பயமுறுத்துகின்றது.இன்று அறிவியல் பாடம் அதுவும் பெளதிகம்.எனக்கும் அந்த பாடத்திற்கும் ஒத்துப் போகாது.இதில் இதை சார்ந்த கேள்விகள் மட்டும் தான் அதிகம் தேர்வில் வருகின்றது.இதற்கு பெயர்தான் தலையெழுத்து என்று சொல்வார்கள்.

0 Comments:

Post a Comment

<< Home