Sunday, July 30, 2006

தமிழா?ஆங்கிலமா?

இன்று முதன் முறையாக சிவகுமாரிடம் சாட் (chat)பண்ணினேன்.எங்கள் அரட்டைக்கு ஒரு முடிவே இல்லாமல் பல மணி நேரம் பேசிக்கொண்டோம்.ஏதோ பல வருடம் அவரைத் தெரிந்த மாதிரி ஒரு உணர்வு.அவர் மேல் உள்ள மரியதை இன்னும் அதிகரித்தது.என்னைப் பற்றி அவரின் வலைப்பகுதியில் புகழ்ந்து தள்ளி விட்டார்.(தரையில் என் கால் இருகின்றதா என்று பார்க்க வேண்டும். )

அண்ணனும் அண்ணியும் மலேசியாவிற்குச் சென்று விட்டார்கள்.அந்த சின்ன வாண்டு(என் அண்ணன் மகன் aka என் மருமகன்) இல்லமால் வீடே அமைதியாக உள்ளது.அவன் மட்டும் இருந்தால் சண்டைப் போட்டுக் கொண்டு இருக்கலாம்.என்ன பெண் நீ சின்ன குழந்தையிடம் எல்லாம் சண்டைப் போடுகின்றாய் என்று நீங்கள் எல்லாம் ஏசலாம்.ஆனால் அதில் உள்ள சுகமே தனி.அந்த சின்ன பொடியன் சொல்லும் பதில்கள் எல்லாமே ஒரு தனி சுகம்தான்.அவனின் அந்த மழலை பேச்சைக் கேட்கும் பொது மனம் பூரித்துப் போகும்.வயது 2 தான் ஆகின்றது.பேச்சு சரியாக வரவில்லை என்றாலும் சரியான வாயாடி.ஒரு சமயம் நானே பதில் சொல்ல முடியமால் திக்கு முக்காடி போய் விடுவேன்.

ஆனாலும் மனதில் ஒரு குறை.அவன் பேசுவது எல்லாம் ஆங்கிலம்தான்.எப்பொழுதுதாவது தமிழ் வார்த்தைகள் வாயில் வரும்.அப்பொழுது எல்லாம் அண்ணன் ருத்ர தாண்டவம் ஆடிவிடுவார்.என் அண்ணனும் அண்ணியும் அவன் ஆங்கிலத்தில் பேச வேண்டும் என்று கட்டயப்படுத்துகின்றார்கள்.நான் தமிழ்ப்பள்ளியில் படித்த மாணவிதான்.24 மணி நேரமும் தமிழைதான் என் பெற்றொர்கள் பேசுவார்கள்.இன்று நான் சீங்கப்பூரில் அதுவும் ஆங்கிலத்தில் கல்வி கற்கின்றேன்.கல்லூரியில் என்னால் ஆங்கிலம்தான் பேச முடியவில்லையா என்ன?தாய் மொழியை மறக்கும் பொழுது நமது அடையாளங்கள் காணமால் போகின்றது என்று யாரும் உணரவில்லை.

என்னால் இங்குதான் புலம்ப முடியும்.என் பேச்சை அவர்கள் கேட்க போவது இல்லை.என்னால் செய்ய முடிந்து எல்லாம் வருங்காலத்தில் என் பிள்ளைகள் இப்படி தமிழை மறக்கமால் இருக்க செய்வதுதான்.நல்ல வேளை என் அப்பா என்னைத் தமிழ் பள்ளியில் படிக்க வைத்தார்.இல்லையென்றால் நானும் என் அண்ணன் மாதிரிதான்........

Saturday, July 29, 2006

தொல்லைகள்

இன்று ஒரு சம்பவம் நடந்தது.இன்று இரயிலில் நேரிசல் அதிகம்.பசி மயக்கத்தோடு உட்கார கூட இடமில்லமால் தவித்துக் கொண்டிருந்தேன்.அந்த சமயம் யாரோ என்னிடம் பேசுவது போல் இருந்தது.திரும்பி பார்த்தால் ஒரு இந்திய பிரஜை ஆங்கிலத்தில் என்னிடம் பேசினான்.

அவன்: Excuse me.Please don't mistake me.I am just curious.Are you telegu?Because you look like a telegu

நான்:(தலையை மட்டும் இல்லை என்று ஆட்டினேன்.வாயில் இருந்து ஒரு வார்த்தைக் கூட வரவில்லை)


அவன்:So you are not telegu?You are not fro
m Andhara pradesh?

நான்:(தலையை தலையை மீண்டும் இல்லை என்று ஆட்டி விட்டு அவசரமாக ஒரு இடத்தில் அமர்ந்துக்கொண்டேன்)

என்னால் சிரிப்பை அடக்க முடியவில்லை.அந்த ஆள் முகத்திலோ ஈ ஆடவில்லை.சரி இதற்கு அப்புறம் நம்மகிட்ட வால் ஆட்ட மாட்டான் என்ற நம்பிக்கையில் அமைதியாக அமர்ந்து இருந்தேன்.தீடிரென்று பார்த்தால் அந்த ஆள் பக்கத்தில் வந்து அமர்ந்துக் கொண்டான்.சரி ஏதவாது வால் ஆட்டினால் பார்த்துக்கொள்வோம் என்று நானும் அமைதியாக இருந்தேன்.

நானும் ஒர கண்ணால் அவன் என்னதான் செய்கிறான் என்று பார்த்தேன்.பெரிய நேட்டு புத்தகம் ஒன்றையும் எதோ கணினி programming புத்தகம் ஒன்றையும் எடுத்துக்கொண்டு ஆர்வமாய் எழுத ஆரம்பித்தான்.எழுதினான் எழுதினான் எழுதிக்கொண்டே இருந்தான் நான் இறங்கும் இடம் வரும் வரை.கடைசியாக நான் இறங்குவதைப் பார்த்துக்கொண்டே இருந்தான்.நானும் எதுவுமே தெரியாதது போல் வந்து விட்டேன்.இருந்தாலும் கொஞ்சம் கூடவேதான் அந்த ஆள் சீன் போட்டான்.அவனைப் பார்கவே பயமாக இருந்தது.யாருக்கு தெரியும் எந்த புற்றில் எந்த பாம்பு இருக்கும் என்று?அப்பாவிடம் இதைப் பற்றிச் சொல்லிச் சிரித்துக்கொண்டேன்.


சரி நான் தென்னிந்திய பெண் போலதான் இருக்கின்றேன்.ஆனால் இதைப் பற்றி அவன் கேட்க வேண்டிய அவசியம் என்ன?தேவையில்லாமல் புத்தகத்தை வைத்துக்கொண்டு பீத்தல் வேற.அவன் இங்கு வந்ததோ பிழைப்பு தேடி.வந்த வேலையைப் பார்க்கமால் பெண்களைப் பார்த்து வழிவது சரிதானா?நான் ஒரு சாதாரணமான விஷயத்தைப் அதிகமாக அலட்டி கொள்வது போல் உங்களுக்குத் தோன்றலாம்.எதோ சொல்ல வேண்டும் என்று என்று நினைத்தேன்......சரி அடுத்த வாரம் மறுபடியும் தலை வலி அதுதான் சோதனை.முதல் தவணை முடிய இன்னும் சில வாரங்கள் தான் உள்ளது.அதன் பிறகு ஒரு மாதம் விடுமுறை.அம்மாவைப் பார்க்க வேண்டும் என்று அவா.ஆனால் 5 நாட்களுக்கு மேல் மலேசியாவில் தங்க முடியாத சூழ்நிலை........

புகிஸ் அனுபவங்கள்!

கடந்த வாரம் முழுவதும் புகிஸில் கழித்து விட்டடேன்.இந்த வாரம் தான் பதிவுகளை வெளிவிட நேரம் கிடைத்தது.அது என்ன புகிஸ் என்று நீங்கள் கேட்கலாம். என் தொழில்நுட்ப கல்லூரியில் ''youth entrepreneurship' என்று ஒரு புதிய திட்டத்தை இரண்டு வாரங்களுக்கு முன் அறிமுகப் படுத்தினார்கள்.இந்த திட்டத்தின் மூலம் மாணவர்கள் தங்கள் சொந்த தொழிலை ஆரம்பிக்கலாம்.இது என்னவென்றால் எங்கள் கல்லூரிக்கு சொந்தமான 12 தள்ளு வண்டிகள் புகிஸ் தேசிய நூலகத்தில் உள்ளது.இதை மாணவர்கள் வாடகை எடுத்து சொந்த தொழில் செய்யலாம்.
எங்கள் குழுதான் இந்த திட்டதின் முதன் முதலாக ஆரம்பித்து வைத்தது.இதில் முதலீடு இருந்து எந்த பொருளை விற்பது முதல் எல்லமே மாணவர்களின் கையில்தான்.எனக்கு சொந்த தொழில் செய்வதில் எல்லாம் அவ்வளவு ஆர்வம் இல்லை.ஆனால் ஒரு அனுபவத்திற்காக இதில் பங்கேற்றேன்.நல்ல அனுபவம்தான் என்னென்றால் எங்களுக்கு நஷ்டம் தான் கடைசியில் மிஞ்சியது.ஆனாலும் பரவயில்லை.தோல்விதான் வெற்றிக்கு படிகட்டுகள்.இந்த இரண்டு வாரங்களும் நல்ல அலைச்சல்.இப்பொதுதான் நிம்மதியாக இருக்கின்றது.
புகிஸில் எடுத்த சில புகைப்படங்கள் உங்கள் பார்வைக்கு........

எங்களின் தள்ளு வண்டி


Tarot card reading


மற்ற தள்ளு வண்டிகள்

நவீன தள்ளுவண்டிகள்....மடிப்பு கணினிகளுடன்





விற்ற சில பொருட்கள்(in other push carts)







கடைசியாக எல்லா பொருளையும் மூட்டைக் கட்டிவிட்டோம்

Saturday, July 22, 2006

ஒரு சனிக்கிழமை

இன்றைய நாள் மிக வேகமாக ஓடி மறைந்து விட்டது.காலையில் புகிஷ்(BUGIS) சென்று எங்களின் தள்ளுவண்டியைச் சிறிது நேரம் பார்த்துக்கொண்டேன். ஆனால் நேரம் ஆக ஆக சலிப்பு அடைந்தேன்.சரி கொஞ்சம் நேரம் லிட்டல் இந்தியா(little India) போய் வரலாம் என்று கிளம்பினேன்.ஆனால் மறுபடியும் திரும்பிச் செல்ல மனம் இல்லாமல் வீட்டிற்கு வந்து விட்டேன்.அப்படி செய்தது தவறுதான் என்னென்றால் எனக்கும் தள்ளுவண்டியைப் பார்த்துக்கொள்ளும் கடமை உள்ளது.பாதியில் மற்றவர்களின் தலையில் வேலையைக் கட்டி விட்டு வந்தது தவறுதான்.அப்புறம் அப்பாவோடு பெரியம்மா வீட்டிற்குச் சென்றேன்.வீடு வந்து சேர்வதற்கே 10 மணி மேல் ஆகிவிட்டது.நல்ல வேளை அண்ணன் சத்தம் போடவில்லை.என்னென்றால் அப்பாவோடுதான் வெளியே போனேன்.இதே நண்பர்களுடன் வெளியே போய் இவ்வளவு நேரம் கழித்து வந்தால் அண்ணன் என் தோலை உரித்து இருப்பார்.

Wednesday, July 19, 2006

IDEA!

நானும் பல வாரங்களாக எதைப் பற்றிய பதிவை வெளியிடலாம் என்று யோசித்து கொண்டிருக்கின்றேன்.கருத்துக்களைச் சொல்லி மற்றவர்களை கழுத்தை அறுக்க ஆசை இல்லை.என்னென்றால் எனக்கு அந்த அளவுக்கு பொது அறிவும் அனுபவமும் இல்லை.இப்பொழுதுதான் வெளியுலகத்தைப் பற்றி கற்று கொண்டிருக்கின்றேன்.தமிழில் தட்டசு செய்ய ஒரு பயிற்சி தேவை.ஆகவே என் அன்றாட வாழ்க்கையப் பற்றி ஏதாவது கிறுக்கி வைக்கலாம் என்று முடிவு செய்தேன்.இதில் படிப்பவார்களுக்கு இதில் ஏதாவது நன்மை கிட்டுமா இல்லை என்று தெரியவில்லை.ஆனால் ஏதாவது எழுத்துப்பிழைகள் இருப்பின் சுட்டிக்காட்டவும்.

Wednesday, July 05, 2006

எதைப் பற்றி சொல்வது?

தமிழில் பதிவை ஆரம்பித்து பல நாட்கள் ஆகிவிட்டது.ஆனால் உருப்படியாக ஒரு பதிவையும் வெளியிட வில்லை.ஒரு வாரமாக கல்லூரியில் வேலைப் பளு சற்று அதிகம்.பரீட்சை,கருத்தரங்கு,கல்வி பட்டறை,வீணை வகுப்பு,பிறந்த நாள் என்று பல நிகழ்ச்சிகள்.சிவகுமாரின் பதிவில் ஒரு கேள்வி கேட்டு இருந்தார்.அதற்குக் கூடிய விரைவில் பதில் அளிக்க வேண்டும்.அதோடு அந்த ஆறு பதிவையும் வெளியிட வேண்டும்.இன்னும் மீச்சம் மீதி இருக்கும் வேலைகளைப் பார்த்தால் தலையே சுற்றுகின்றது.வெள்ளிக்கிழமை அடிப்படை அறிவியல் சோதனை இருக்கின்றது.படித்து எதுவுமே மண்டையில் ஏறவில்லை.அந்தக் கடவுளின் மேல் பாரத்தைப் போட்டு விட்டு படிக்கப் போகின்றேன்.