Friday, August 11, 2006

நன்றி

சிவகுமார்தான் தமிழில் பதிவை எழுதச் சொல்லி மாட்டிவிட்டார்.இந்த பதிவை எழுத மூலக்காரணம் அவர்தான்.அவருக்கு மறுபடியும் நன்றி.முதலில் இந்த பதிவை ஆரம்பிக்கும் பொழுது கொஞ்சம் தயக்கமாக இருந்தது.தமிழைக் கொலை செய்மால் இருக்க வேண்டும் என்ற ஒரு நல்ல எண்ணம்தான் என் தயக்கத்திற்குக் காரணம்.ஆனால் என் பதிவைப் படித்தவர்கள் அனைவரும் இதுவரையில் என் பதிவைப் பற்றி நல்ல விதமாக தான் சென்னார்கள்.உங்கள் அனைவருக்கும் என் நன்றி.தயவு செய்து ஏதாவது பிழைகள் இருந்தால் சுட்டிக்காட்டவும்.

திரு பாலபாரதி சிங்கை மக்கள் அடிமைகளா இருந்தகாலம் குறித்தும் செய்தி சேகரித்து எழுத சொன்னார்.எனக்கு தெரிந்தைப் பற்றிதான் எழுத முடியும்.தெரியதைப் பற்றி எழுதி மாட்டிக்கொள்ள வேண்டாம் என்று நினைக்கின்றேன்.எனக்குத் தெரிந்தது எல்லாம் சீங்கப்பூர் மலேசியாவை விட்டு தனித்து வந்த நாளைதான் சுதந்திர தினமாக கொண்டாடுகின்றனர்.
இந்த பதிவைப் படிக்கும் பொழுது அதே சமயம் ஏதோ அடுத்தவரின் டைரியை திருட்டுத் தனமாக படிப்பது போன்ற உணர்வும் ஏற்படுகிறது என்று திரு பாலபாரதி பின்னூட்டம் இட்டு இருந்தார்.அய்யோ இது ஒன்றும் என் உண்மையான நாட்குறிப்பு இல்லை.அதைப் பத்திரமாக என் அலமாரியில் பூட்டு போட்டு வைத்துள்ளேன்.இந்த பதிவில் எந்த ரகசியமும் இல்லை.அனைவரும் தரளமாக படிக்கலாம்.ரொம்ப கஷ்டமாக இருந்தால் படிக்க வேண்டாம்.பாவம் நீங்கள்!இதுவரையில் படித்ததே பெரிய விஷயம்.

P.S:ஜொள்ளு சார் ,என் படத்தை மாற்றி விட்டேன்.இந்தப் படத்தைத் தேடிக்கொடுத்ததிற்கு நன்றி

8 Comments:

Blogger மா சிவகுமார் said...

துர்கா,

நல்ல களையான முகம் உங்களுக்கு, புகைப்படத்தில். :-)

அன்புடன்,

மா சிவகுமார்

10:17 PM  
Blogger ஜொள்ளுப்பாண்டி said...

வாவ் துர்கா இந்தப் படத்துக்காகவே பல பேரு உங்களை பாராட்டப் போறாங்க :))))))

ஆமா இதென்னா ஜொள்ளு சார்?? இதெல்லாம் நல்லா இல்லை சொல்லிட்டேன் :))

12:21 PM  
Blogger t.h.u.r.g.a.h said...

ஜொள்ளு சார்ன்னு கூப்பிட வேண்டாம் என்றால் ஜொள்ளு அண்ணா எப்படி இருக்கு?சீக்கரம் சொல்லுங்கள் எப்படி கூப்பிட வேண்டும் என்று

3:11 PM  
Blogger ஜொள்ளுப்பாண்டி said...

அதென்ன ஜொள்ளு அண்ணா ?? சினப்புள்ளத்தனமால்ல இருக்கு !! சரி சரி ஜொள்ளுபாண்டின்னே கூப்பிடு தாயி !!! சும்மா இந்த அண்ணா அப்பத்தான்னு அலப்பறை எல்லாம் வேணாம் !! :)))

3:59 PM  
Blogger t.h.u.r.g.a.h said...

jollz sound nicer right jollu pandi anna!

4:12 PM  
Blogger - யெஸ்.பாலபாரதி said...

//ரொம்ப கஷ்டமாக இருந்தால் படிக்க வேண்டாம்.பாவம் நீங்கள்!இதுவரையில் படித்ததே பெரிய விஷயம்.//

நன்றி!

5:45 PM  
Blogger t.h.u.r.g.a.h said...

இதற்கு அப்புறம் உங்களை இங்கு பார்க்க முடியுமா?

6:04 PM  
Blogger மா.கலை அரசன் said...

சரளமாக எழுத வருகிறது உங்களுக்கு. சுவைபடவும் எழுதுகின்றீர்கள்.

6:26 AM  

Post a Comment

<< Home